"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்" என்ற பாடல் சிறந்த பத்துப்பாடல்களில் வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்து உள்ளது.
1995 ஆம் ஆண்டு இலங்கையில் யாழ்நகரைவிட்டு ஒட்டுமொத்த மக்களும் தென்மராட்சி பிரதேசத்துக்கு இருந்த ஒரே ஒரு குறுகிய பாதையால் இடம்பெயர்ந்தபோது எழுதப்பட்ட பாடலாக இருக்கவேண்டும். அக்காட்சியை காணொளியில் பார்த்துக்கொண்டு பிண்ணனியில் ஒலிக்கும் இப்பாடலை கேட்கும்போது இப்போதும் மனது கனக்கும். இந்தப் பாடலின் முழுமையான வரிகள் இதோ.....
பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குத போகுமிடம் தெரியாமல் -
இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்குமிடம் தெரியாமல் ..
கூடு கலைந்திட்ட குருவிகள் -
இடம் மாறி நடக்கின்ற அருவிகள்.
ஒற்றை வரம்பினில் ஓடும் இவர்களின் ஊரில் புகுந்தத -ஆமி
ஒரு குற்றம் செய்யாதவர் முற்றத்தில் ஆயிரம் குண்டுகள் விழுதே - சாமி
சோகத்தின் கோடுகள் முகத்தில்
இந்த
சொந்தங்கள் சேருமா நிலத்தில்....
கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி யாவும் இவரிழந்தார
நேற்று
பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் துறந்துமே போகும் திசை அறியாரே....
நெஞ்சில் வழிவதோ துயரம்
வழி நீளும் திசை இவர் பயணம்.....
தாயில் மடியினில் ஆசையுடன்
தலை சாய்த்து உறங்கிய நேரம்
வந்த பேய்கள் கொளுத்திய தீயில்
எரிந்தவர் போகும் வழியெலாம் ஈரம்..
மாடுகள் கூடவா அகதி
தமிழ்
மண்ணிலே ஏனிந்த சகதி...
பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: திருமலைச் சந்திரன்.
இந்த பாடலை கேட்க விரும்பினால்...Pulikalinkural.com or http://us7.maindigitalstream.com/3076/
Poovum Nadakkuthu Pinchum Nadakkuthu
Singer: Thirumalai Chandran.
Lyrics: Puduvai Irathinathurai.
Text Copy From: Thanks To SeithuPunal
#PoovumNadakkuthu

